மக்கள் தொலைக்காட்சி

Monday, January 21, 2013

 எங்கே செல்கிறது தமிழகம் ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் தடையா ?



கடலூர் : பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் குரு இருவரும் கடலூர் மாவட்டத்தில் நுழைய 2 மாதங்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கிர்லோஸ் குமார் நேற்று உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்தார். அதற்காக, வடலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று (22ம் தேதி) கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி தடை விதித்தார். வருகிற 30ம் தேதி வரை மாவட்டத்தில் சாதி சங்க கூட்டங்கள் நடத்தவும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜெ.குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்கு நுழைய தடைவிதித்து மாவட்ட கலெக்டர் கிர்லோஸ் குமார் நேற்று உத்தரவிட்டார். இது குறித்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும் சட்டம்,ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு ஆகியோருக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144,ன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆணையிடப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு 21,1,2013 முதல் 20,3,2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு கலெக்டர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கலெக்டரின் உத்தரவு தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டு கதவில்  வானூர் வட்டாட்சியர் ஒட்டினார். உடன் போலீசார் சென்றனர்.

No comments:

Post a Comment